உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொந்தமாக யு டியூப் சேனல் தொடங்கிய சல்மான் கான்

சொந்தமாக யு டியூப் சேனல் தொடங்கிய சல்மான் கான்


சினிமா பிரபலங்கள், அதிலும் குறிப்பாக நடிகைகள் பலரும் தங்களுக்கு என தனியாக யு டியூப் சேனல்களை அவ்வப்போது தொடங்குவதைப் பார்த்திருக்கிறோம். தங்களைப் பற்றிய செய்திகளையும், தங்கள் பயணங்கள் மற்றும் படங்கள் குறித்த விவரங்களையும் ரசிகர்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதற்காக இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கையும் தாண்டி யு டியூப்பிற்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூட தற்போது புதிய யூடியூப் சேனல் ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.

குறிப்பாகத் தன்னுடைய ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் இந்த முயற்சியை அவர் ஆரம்பித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ள சல்மான் கான், தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று குறிப்பிடும் ஒரு சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அவரது சேனலின் பயோ (Bio) குறிப்பில் திரைப்பட நடிகர், கலைஞர், ஓவியர், மனிதாபிமானி; இது எனது அதிகாரப்பூர்வ சேனல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !