வாசகர்கள் கருத்துகள் (2)
ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டுமே
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடித்து அக்டோபர் 15ல் வெளியாக உள்ள 'ஜெயிலர் 2' படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முக்கியமான ஆன்லைன் இணையதளங்களில் படம் வெளியாகும் நாளிலும், அதற்கடுத்த விடுமுறை நாட்களிலும் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் தற்போது முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது போகப் போக அதிகாக வாய்ப்புள்ளது. முன்பதிவு ஆரம்பமாகி ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இதுவரையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தொகை மட்டுமே 20 கோடி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்ட ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் உருவாக்கி அதை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த வருடத்தில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக நிச்சயம் இருக்கும் என்று எதிரிபார்க்கப்பட்டாலும், தமிழ் சினிமாவில் இதுவரையில் வந்த படங்களில் அதிக வசூலைக் குவிக்கப் போகும் படமாகவும் இருக்கலாம் என்ற பெரிய எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு எழுந்துள்ளது.
ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டுமே