உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீதிமன்றத்தில் அமிதாப் பச்சன் நேரில் ஆஜராக வேண்டும் ; டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தில் அமிதாப் பச்சன் நேரில் ஆஜராக வேண்டும் ; டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது ஆளுமை உரிமைகள் குறித்துத் தொடர்ந்த வழக்கில் சில நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேசமயம் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் வாய்ப்பு கொடுத்தது. ஆனால், அந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்று அமிதாப் பச்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள கோரிக்கைகளை அமிதாப் பச்சன் தொடர விரும்பினால், அடுத்தகட்ட விசாரணையின் போது அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 16 வரை அமிதாப் பச்சனுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !