உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மேஜைக்கு அடியில் அமர்ந்து அழுத இயக்குநர் ; மாதுரி தீட்சித் பகிர்ந்த சுவாரசிய தகவல்

மேஜைக்கு அடியில் அமர்ந்து அழுத இயக்குநர் ; மாதுரி தீட்சித் பகிர்ந்த சுவாரசிய தகவல்


90களில் பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாதுரி தீட்சித். தற்போது மீண்டும் பாலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, தான் முன்பு பணியாற்றிய ஒரு இயக்குநர் குறித்துப் பேசுகையில் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. காரணம், அந்த இயக்குநர் எந்தக் காட்சியை விவரிப்பதாக இருந்தாலும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு விடுவாராம்.

எந்த அளவுக்கு என்றால், சில நேரங்களில் நடிகர்களுக்குக் காட்சிகளை விளக்கும்போதே அந்த இயக்குநர் திடீரென காணாமல் போய்விடுவாராம். தேடிப் பார்த்தால் அவர் மேஜையின் அடியில் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பாராம். இன்னொரு முறை கேமரா டிராலி ஷாட் சென்று கொண்டிருந்தபோது, மாதுரி தனது வசனத்தைப் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது எங்கிருந்தோ விசும்பல் சத்தம் கேட்கவே சுற்றும் முற்றும் பார்த்தால், அந்த டிராலியின் மீது அமர்ந்து அந்த இயக்குநர் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்து மாதுரி தீட்சித் அதிர்ந்து போனாராம். இப்படியும் சில உணர்ச்சிவசப்பட்ட இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று மாதுரி தீட்சித் இந்த சுவாரசியத் தகவலைக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !