உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தினமலர் திரைத் திருவிழா : ‛ஜெயிலர் 2' டிக்கெட் நீங்களும் வெல்லலாம்

தினமலர் திரைத் திருவிழா : ‛ஜெயிலர் 2' டிக்கெட் நீங்களும் வெல்லலாம்

திரை ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டமான ஒரு நடிகர் ரஜினிகாந்த். அவரது படங்கள் ரிலீஸ் என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். 50 ஆண்டுகளை கடந்த அவரது திரையுலக பயணத்தில் இப்போதும் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இன்றைய குழந்தைகள் கூட இவரது படத்தை ரசிக்கிறார்கள். அவரது அடுத்த வெளியீடாக அடுத்த வாரம் அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 படம் வெளியாகிறது.

இந்தாண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‛ஜெயிலர் 2' படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தினமலர் வாசகர்கள் இந்த படத்தை காண ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. ‛தினமலர் திரைத் திருவிழா' கொண்டாட்டமாக ‛ஜெயிலர் 2' போட்டி தினமலர் இணையதளத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் தினமலர் பற்றி சூப்பரான ஸ்லோகன் சொல்லுங்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ‛ஜெயிலர் 2' படத்தை காண டிக்கெட் உடன் ஸ்னாக்ஸ் வழங்கப்படும்.

இந்த போட்டி முழுக்க முழுக்க சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. போட்டிக்கான டிக்கெட்டும் சென்னையில் உள்ள தியேட்டர்களில் தான் வழங்கப்படும்.

போட்டியில் நீங்களும் கலந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்க... https://cinema.dinamalar.com/Jailer-2

அப்புறம் என்ன வாசகர்களே போட்டியில் கலந்துகோங்க...

ஜெயிச்சு பாருங்க...!
ஜெயிலர் 2 பாருங்க...!!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !