உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளிக்கு தள்ளிப்போன விஜய் ஆண்டனியின் ‛அப்பா குட்டி'

தீபாவளிக்கு தள்ளிப்போன விஜய் ஆண்டனியின் ‛அப்பா குட்டி'

மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛அப்பா குட்டி'. தவிர பகவதி பெருமாள், ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிசி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீணா, ஹரிதா மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

தந்தை - மகள் இடையேயான உணர்வுப்பூர்வமான பாசப் பிணைப்பைக் மையமாக வைத்து ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்தபடம் அடுத்தவாரம் அக்., 16ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினத்திற்கு முதல்நாள் ரஜினியின் ‛ஜெயிலர் 2' வருகிறது. இதனால் இந்த படத்திற்கு குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைக்கும் சூழல். இதனால் படம் தள்ளிப் போகலாம் என செய்தி வந்தது. இப்போது படத்தை தீபாவளி வெளியீடாக நவம்பர் 6ம் தேதி ரிலீஸ் வெளியிடுவதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !