கர்நாடகாவில் வசூல் சாதனை படைக்கும் ரூ.2 கோடி திரைப்படம்
பிரேமதா ஊராளி என்ற படம் கன்னட சினிமா துறையின் சமீபத்திய பேசு பொருளாக மாறியுள்ளது. இது ரிலீஸுக்கு முன்பு எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியானது. கிராமப்புற பின்னணியைக் கொண்டு குடும்ப உறவுகளை ஆராயும் ஒரு எளிய கதையாகும். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மெதுவான தொடக்கத்தையே பெற்றது. இருப்பினும் அடுத்தடுத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது ரூ. 50 கோடி வசூல் இலக்கை தாண்ட உள்ளது. வெறும் ரூ. 2 கோடி என்ற குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப ரசிகர்களிடமிருந்து படத்திற்கு மாபெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் காட்டிவரும் இந்த அதிரடியான எழுச்சியைப் பார்க்கும்போது, இதன் இறுதி வசூல் 100 கோடியை நெருங்கும் என்கிறார்கள். மனோஜ் குமார் இயக்கியுள்ள இப்படத்தில், ரங்கநாய ரகு, ஸ்ரீ ராம், தபஸ்வினி பூனாச்சா, ரமிகா ஷிவு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.