உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தி தேர்ட் மர்டர் மூலம் அடுத்த வெற்றிக்கு தயாராகும் மலையாள சினிமா

தி தேர்ட் மர்டர் மூலம் அடுத்த வெற்றிக்கு தயாராகும் மலையாள சினிமா

மலையாளத்தில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் திடீரென இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கோடிகளில் வசூலை அள்ளுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தி தேர்ட் மர்டர் என்கிற படம் வெளியானது. மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஷைஜு குறூப், கருப்பு படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இந்திரன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தில் மமிதா பைஜுவின் ஸ்ட்ரிக்ட்டான தாய்மாமாவாக நடித்திருந்த வினய் போர்ட் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் சைக்காலஜிக்கல் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

இப்படத்தை சுனில் இப்ராஹிம் இயக்கியுள்ளார். படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது மவுத் டாக் மூலம் படம் பற்றிய தகவல் பரவி வருவதால் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி போகப் போக பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் விறுவிறுப்பையும் தூண்டும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !