அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இணையும் படப்பிடிப்பு விரைவில் துவக்கம்
அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் கைவிடப்படலாம் என்று யூகங்கள் பரவி வந்தன. காரணம், படத்தின் இறுதி வடிவமைப்பு அல்லு அர்ஜுனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாததால், காட்டுத்தீ போல பரவிய இந்த வதந்தியால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், தற்போது அல்லு அர்ஜுனின் தரப்பினர் இந்த யூகங்களை மறுத்துள்ளதுடன், அவை ஆதாரமற்றவை என்கின்றனர். தற்போது ராக்கா படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதால், வெகு விரைவிலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் தயாராகப் போகிறார். அதனால் ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளால் குழப்படைமடைய வேண்டாம். சமீபத்திய வந்த செய்திகள் எதுவும் உண்மை இல்லை என்று அறிவித்துள்ளார்கள்.
அட்லியுடன் ராக்கா படத்தை முடித்த பிறகு, அல்லு அர்ஜுன் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.