‛8 தோட்டாக்கள்' வெற்றி நடிக்கும் பரீட்
'வெப்' படத்தை இயக்கிய ஹாரூணின் அடுத்த படம் பரீட். இதில் ‛8 தோட்டாக்கள்' வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். கதைப்படி ஒரு என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறார். ஐதராபாத்ததை சேர்ந்த அக்சிதா ஹீரோயின். சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, 'லப்பர் பந்து' ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார். அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்த விதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி, இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகியுள்ளது.
போலீஸை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார். சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.