30 நாட்களில் 178 கோடி : மண்டாடி படத்தின் வசூல் தொடர்கிறது
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்த மண்டாடி படம் வெளியாகி 1 மாதம் ஆகிவிட்டது. படம் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. இந்நிலையில் படத்தின் வசூல் 178 கோடியை கடந்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூல் இன்னும் கூடுமா? மண்டாடி படத்தின் ஒட்டு மொத்த வசூல் 200கோடியை தொடுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. ஓடிடியில் வெளியாகிவிட்டதால், தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறையும், வசூலும் குறையும் என்று கூறப்படுகிறது.
அதையும் மீறி வருங்காலங்களில் மண்டாடி படம் வெற்றி பெற்றால் அது பெரிய சாதனையாக இருக்கும். அக்டோபர் 15ல் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 வருகிறது. அதனால், மண்டாடி ஓடும் தியேட்டர் எண்ணிக்கையும் குறைய வாய்ப்பு. ஆகவே, 180 கோடியை படம் தாண்டலாம். ஆனால், 200 கோடி என்பது பெரிய விஷயம்தான் என்று கூறப்படுகிறது. இத்தனை கோடி படம் வசூலித்த நிலையில், இந்த படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட சூரியும், படக்குழுவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.