உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.8 கோடி சம்பளம் கேட்கிறேனா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த 'கே.ஜி.எப்' நடிகை

ரூ.8 கோடி சம்பளம் கேட்கிறேனா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த 'கே.ஜி.எப்' நடிகை

கன்னடத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'கே.ஜி.எப்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. அந்தப் படத்தின் மூலம் பிரபலமான அவர், அதன்பிறகு தமிழில் விக்ரமுடன் 'கோப்ரா', தெலுங்கில் நானி நடித்த 'ஹிட் ; தி தேர்ட் கேஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'தெலுசு கதா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமகம்வே இவர் தனது சம்பளமாக ஏழு முதல் எட்டு கோடி வரை கேட்கிறார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சம்பளம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நான் 7 முதல் 8 கோடி வரை சம்பளம் கேட்பதாக ஒரு வதந்தி தேவையில்லாமல் பரவியது. நான் இதுவரை மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அப்படி இருக்கையில் என்னால் இவ்வளவு பெரிய தொகையை எப்படி சம்பளமாகக் கேட்க முடியும்? எனவே, இது முழுக்க முழுக்க ஒரு வதந்தி மட்டுமே. பணம் சம்பாதிப்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தால், கடந்த சில ஆண்டுகளில் நான் 30-40 படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால், நான் பணத்திற்காகப் படங்களில் ஒப்பந்தம் ஆவது கிடையாது. நல்ல கதைகளுக்கும் தரமான கதாபாத்திரங்களுக்கும் தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !