உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானா படேகர் மறைவு குறித்து 'ஈவில் டெட்' என விமர்சித்த நடிகை : சினிமா தொழிலாளர் சங்கம் கண்டனம்

நானா படேகர் மறைவு குறித்து 'ஈவில் டெட்' என விமர்சித்த நடிகை : சினிமா தொழிலாளர் சங்கம் கண்டனம்

பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் தனது 75வது வயதில் நேற்று (அக்-8) காலமானார். இவரது மறைவுக்குப் பிரதமர் முதல் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா தனது சோசியல் மீடியா பக்கத்தில் இவரது மறைவு குறித்து 'ஈவில் டெட்' என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சர்ச்சைக்கும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது..

இந்த தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்கிற படத்தில் நடித்தவர். சொல்லப்போனால், 'மீ டூ' பிரச்சாரம் மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தும் முயற்சியை முதலில் ஆரம்பித்து வைத்தவர் இவர்தான். அப்படி அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மறைந்த நானா படேகர்.

அவர் கூறிய குற்றச்சாட்டில், 2009-ல் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்கிற படத்தில் நடித்தபோது நானா படேகர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டினார். இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். ஆனால், அந்த வழக்கை விசாரித்த போலீசார், நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லை எனக் கூறிவிட்டனர். அப்போதிருந்து நானா படேகர் மீது கடுமையான வார்த்தைகளைப் பேசி வந்தார் தனுஸ்ரீ தத்தா.

இந்த சூழ்நிலையில், தற்போது நானா படேகர் மறைந்த நிலையில், அவரது மரணம் குறித்து 'ஈவில் டெட்' என்றும், தான் லக்னோவில் விரைவில் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சியின் கவனத்தை நானா படேகரின் மறைவு செய்தி திசை திருப்பிவிடுமோ என்று கவலைப்படுவதாகவும் அவர் தனது பதிவில் கூறியிருந்தார்..

இதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் சியாம்லால் குப்தா தனுஸ்ரீ தத்தாவை கடுமையாகச் சாடியுள்ளார். திரைப்பட உலகமே ஒரு ஜாம்பவானின் இழப்பை நினைத்து வேதனையற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தனுஸ்ரீ தத்தாவின் செயல் ஒரு மலிவான விளம்பரமாகும். பொதுவாக ஒருவரின் மறைவுக்குப் பின் இதுபோன்று பொறுப்பற்ற அறிக்கையை யாரும் வெளியிட்டது இல்லை; நீங்கள்தான் முதல் நபர். நீங்களே கடைசி நபராக இருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம் என கடுமையாக விமர்சித்துள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !