உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரணபலி'-யா இல்லை 'ரணபாலி'--யா ? குழப்பும் படக்குழு

'ரணபலி'-யா இல்லை 'ரணபாலி'--யா ? குழப்பும் படக்குழு

தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பிரபலமான நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. சில வருடங்களாகக் காதலித்து தங்கள் காதலை வெளியில் சொல்லாமல் வைத்திருந்தார்கள். பின்னர் காதலை அறிவித்து, இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

திரையுலகில் பொருத்தமான ஜோடியாகப் பார்க்கப்பட்டவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்த பிறகு நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'ரணபாலி'.

பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். நேற்று படம் வெளியாகும் அனைத்து மொழிகளிலும் டிரைலரை வெளியிட்டார்கள்.

டிரைலரில் விஜய் தேவரகொன்டா கதாபாத்திரத்தை, 'சிங்கனமல பொப்பிலி ரணபாலி' என்ற பெயரில் சுருக்கமாக 'ரணபாலி' என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஆனால், டிரைலரில் வரும் டைட்டிலில் ‛ரணபாலி' என்றும் இறுதியில் படத்தின் போஸ்டரில் 'ரணபலி' என்றும், அதற்கான எக்ஸ் தளப் பதிவில் 'ரணபாலி' என்றும் போட்டுள்ளார்கள்.

ஒரே படத்தின் பெயரை இரண்டு விதமாக போட்டு குழப்பியுள்ளது படக்குழு. இப்படியான தவறுகள், கவனக் குறைவுகள் படத்திலும் இருக்காது என்று நம்புவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !