12 ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டியில் கீர்த்தி சுரேஷ்
ADDED : 8 hours ago
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவிலும் பல இயக்குனர்களுக்கும் பிடித்தமான ஒரு மலைப் பிரதேச நகரம் ஊட்டி. பல படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடந்துள்ளன. அதன் காரணமாக அடிக்கடி ஊட்டி போய் வரும் நடிகர்கள், நடிகைகள் இருப்பார்கள். குறிப்பாக பாடல் காட்சிகள் அங்கு அதிகம் படமாக்கப்படும்.
முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்புக்காக ஊட்டி சென்றிருக்கிறார். இது குறித்து அவருடைய இன்ஸ்டா தளத்தில், “ஊட்டியில் படப்பிடிப்பு… 'ரிங் மாஸ்டர்' படத்திற்கு பின்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு…” எனப் பதிவிட்டுள்ளார்.
தற்போது தெலுங்குப் படமான 'ஜனவரி 12 விடுதலா' படத்திற்காக அவர் ஊட்டி சென்றுள்ளார். 12 ஆண்டுகளாக கீர்த்தி நடித்த படங்களில் ஒன்று கூட ஊட்டியில் படமாக்கப்படவில்லை என்பதே ஆச்சரியம்தான்.