உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற 'என்ன விலை'

அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற 'என்ன விலை'

சஜீவ் பாழூர் இயக்கத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‛என்ன விலை'. கடலோர பகுதியான ராமேஸ்வரத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், எதிர்பாராத திருப்பத்தை சந்திக்கும் ஒரு மீனவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியானது. இந்த படம் அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றது. அக்டோபர் 3ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆல்பி ஆண்டனி சார்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக் கொண்டார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி கூறியதாவது, அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெறுவது எனக்கு பெருமையான தருணம். 'என்ன விலை' படம் அதன் கதைக் களத்துடனும் கதாபாத்திரங்களுடனும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அந்த உலகத்தை காட்சிகளாக மாற்றும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். இந்தப் பெருமையை இயக்குநர் சஜீவ் பாழூர், தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களான ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்துள்ள இந்தச் சர்வதேச அங்கீகாரம், 'என்ன விலை' படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது. படத்தின் காட்சி மொழிக்கும், படக்குழுவினரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறோம்” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !