ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய திரையரங்கம் : ஏசியன் சினிமாஸ் உடன் கைகோர்க்கும் சிரஞ்சீவி
ஐதராபாத்திற்கு உலகின் மிகப்பெரிய திரையரங்கை கொண்டு வர நடிகர் சிரஞ்சீவி, ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். இந்த செய்தி வெளியானதிலிருந்து, ஐதராபாத் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமீபத்திய தகவலின்படி, ஏசியன் சினிமாஸ் மற்றும் சிரஞ்சீவி கூட்டணியில் ஐதராபாத்தில் மற்றொரு திரையரங்க வளாகத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரையரங்கிற்கு ஏசியன் மெகாஸ்டார் சினிபிளக்ஸ் என்று பெயரிடப்பட்டு, 2027 சங்கராந்திப் பண்டிகையை முன்னிட்டு திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய திரையரங்கை கட்டப்படுவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்பதால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த புதிய திரையரங்க வளாகத்தைத் தொடங்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். ஏசியன் சினிமாஸ் மற்றும் சிரஞ்சீவி இணைந்து குஷாயிகுடாவில் உள்ள தல்லூரி திரையரங்கத்தைக் கைப்பற்றி, நவீன வசதிகளுடன் அதனைப் புதுப்பித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.