உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பந்தா கேங்ஸ்: தினேஷின் புதிய படம் அறிவிப்பு

பந்தா கேங்ஸ்: தினேஷின் புதிய படம் அறிவிப்பு

'அட்டக்கத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தினேஷ். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, குக்கூ, விசாரணை, லப்பர் பந்து உள்ளிட்ட படங்களில் நடித்துத் கவனம் பெற்றார். தற்போது 'வேட்டுவம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தினேஷ் நடிக்கும் அவரது 26வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு 'பந்தா கேங்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. மதி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வி6 பிலிம் சார்பாக வேலாயுதம் என்பவர் தயாரித்துள்ளார். இதில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். முழு நீள காமெடி படமாக உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !