உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர் கொலை வழக்கு : பவித்ரா கவுடாவிற்கு ஜாமீன் மறுப்பு

ரசிகர் கொலை வழக்கு : பவித்ரா கவுடாவிற்கு ஜாமீன் மறுப்பு

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரேணுகாசாமி என்கிற நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். தர்ஷன் நடிகை பவித்ரா கவுடாவுடன் தொடர்பில் இருந்து கொண்டு அவர் தனது மனைவியை கொடுமைப்படுத்துவதாக விமர்சித்தார். பவித்ரா கவுடாவை மிக கடுமையாக ஆபாசமாக பேசினார். ரேணுகாசாமி கொல்லப்பட்ட வழக்கில் தர்ஷனும், பவித்ரா கவுடாவும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர்.

கொலை வழக்கு பெங்களூரு 59-வது சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில், பவித்ரா கவுடா ஜாமீன் கோரி சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது உடல் நிலை சரியில்லை என்றும் தனது மகனின் படிப்புக்கு உதவ வேண்டும் என்றும் அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். ஜாமீனில் வெளியிட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிமன்றம் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையில் இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படும் பிரகாஷ் என்பவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !