உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டிரோல்'களால் தவிக்கும் புதிய படங்கள்

'டிரோல்'களால் தவிக்கும் புதிய படங்கள்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சண்டை என்பதைக் கூட சினிமாவில் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், சமூக வலைத்தள உலகில் 'டிரோல்கள்' என சொல்லப்படும், கிண்டல், கேலிகளால், அரைகுறையான விமர்சனங்களால் படங்களின் வரவேற்பும், வசூலும் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் மட்டுமே செய்யப்படும் இந்த 'டிரோல்கள்' தற்போது ஒவ்வொரு படத்திற்குமே செய்யப்படுவதுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும். ஆனால், தங்கள் ரசனை அதிகம் வெளிப்பட்டாக வேண்டும், பலரும் அதை கவனிக்க வேண்டும் என 'லைக்ஸ்' மற்றும் 'வியூஸ்கள்' ஆகியவற்றை அள்ளவே பலரும் இதைச் செய்து வருகிறார்கள்.

படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் அதை விமர்சிக்க உரிமை உண்டு. இருப்பினும் அவை 'டிரோல்கள்' என்ற பெயரில் வரம்பு மீறிய ஒன்றாக மாறிவிட்டது. படம் வெளியான உடனேயே இம்மாதிரியான நெகட்டிவ் விமர்சனங்கள் படங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

நேற்று வெளியான பான் இந்தியா படமான 'தி பாரடைஸ்', தமிழ்ப் படமான 'டோரதி' ஆகியவை தற்போது சமூக வலைத்தளங்களில் 'டிரோல்களில்' சிக்கியுள்ளன. அதிலிருந்து அந்தப் படங்கள் மீண்டு எப்படியான வரவேற்பைப் பெறும் என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !