உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 56 படத்தில் 'உறியடி' விஜயகுமார்

தனுஷ் 56 படத்தில் 'உறியடி' விஜயகுமார்

2016ல் வெளிவந்த 'உறியடி' படத்தின் மூலம் அப்போதைய இளம் ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜயகுமார். அந்தப் படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் 'உறியடி 2' படத்தை இயக்கி, நடித்தார். ஆனால், அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அதற்கடுத்து சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்திற்கு வசனம் எழுதினார். அவர் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருந்த 'பைட் கிளப்' படத்தில் நாயகனாக நடித்தார். அதற்கடுத்து அதே போல 'எலக்ஷன்' படத்தையும் தயாரித்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் கூட வரவேற்பைப் பெறவில்லை.

அடுத்து சத்ய சிவா இயக்கத்தில் 'அறிவு' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது தனுஷின் 56வது படத்திலும் பங்கேற்றுள்ளார். நேற்று இந்தப் படத்தின் பூஜையில் கலந்து கொண்ட பின்பு தனுஷுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து, “புதிய பயணம் ஆரம்பம், இந்தப் படத்தில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் தனுஷ் ஆகியோர் அளித்த வாய்ப்புக்கும், பணிபுரிவதும் பெருமையாக உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் அவர் நடிக்க உள்ள கதாபாத்திரம் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இப்படத்தில் தனுஷுடன் முதல் முறையாக வடிவேலுவும் நடிக்கிறார். இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் பற்றிய ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !