உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : ‛ஒன் சன் ஒன் மூன்' பாடல் வெளியீடு

ஜெயிலர் 2 : ‛ஒன் சன் ஒன் மூன்' பாடல் வெளியீடு

ஜெயிலர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த கூட்டணியில் ‛ஜெயிலர் 2' உருவாகி வருகிறது. முதல்பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்டோருடன் புதிதாக எஸ்ஜே சூர்யா, வித்யாபாலன், சுராஜ் வெஞ்சராமூடு ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்தமாதம் அக்., 15ல் படம் ரிலீஸாக உள்ளது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து ‛அல்ல போலேலொ' என்ற பாடல் ஆக., 21ல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது வரை அந்த பாடலுக்கு 32 மில்லியனுக்கு அதிகமான பார்வைகள் யுடியூப்பில் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று(செப்., 25) இரண்டாவதாக ‛ஒன் சன் ஒன் மூன்' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆங்கிலம் அதிகம் கலந்து இப்பாடல் வெளியாகி உள்ளது. ஹைசன்பர்க், சூப்பர் சுப்பு பாடல்களை எழுதி உள்ளனர். அனிருத், எம்எஸ் கிருஷ்ணா இணைந்து பாடி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !