உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் ஆனார் உன்னி முகுந்தன்

இயக்குனர் ஆனார் உன்னி முகுந்தன்


'மார்கோ' படத்திற்கு பிறகு உன்னி முகுந்தன் படத்தை தயாரிக்கிறது பனோரமா ஸ்டூடியோ. இதன் உரிமையாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் ஆகியோருடன் இப்போது உன்னி முகுந்தனும் தயாரிப்பில் இணைந்துள்ளார். தனது நிறுவனத்திற்கு உன்னி முகுந்தன் பிலிம்ஸ் என்று பெயரும் வைத்துள்ளார்.

புதிய படத்தை உன்னி முகுந்தன் எழுதி, இயக்குகிறார். பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகிறது. பனோரமா ஸ்டூடியோ ஏற்கெனவே 'ஓம்காரா, ஸ்பெஷல் 26, பியார் கா பஞ்ச்நாமா, ரெய்டு, ஷைத்தான், த்ரிஷ்யம்' படங்களை தயாரித்துள்ளது. உன்னி முகுந்தனின் 50வது திரைப்படம் என்ற வகையிலும் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து உன்னி முகுந்தன் கூறும்போது, “எனது 50வது படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதை எழுதி, இயக்குவது எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்துள்ளது. எனது சொந்த கதைகளை சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துள்ளது. அதற்கான சரியான கதையும், சரியான தருணமும் இதுதான் என்று உணர்ந்தேன். இந்தத் திரைப்படம் பல்வேறு மொழிகள் பேசும் ரசிகர்களை நிச்சயம் சென்றடையும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !