உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் 50 ஆண்டுகள் இசைச்சேவை: ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு கவுரவம்

சினிமாவில் 50 ஆண்டுகள் இசைச்சேவை: ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு கவுரவம்

இசையமைப்பாளர் இளையராஜா இப்போது ஆஸ்ரேலியாவில் இசைசுற்று பயணம் செய்கிறார். பல்வேறு ஊர்களில் அவரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. செப்டம்பர் 19ம் தேதி மெல்போர்னில் முதல் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. அடுத்த கச்சேரி பெர்த் (24ம் தேதி சிட்னி (26ம் தேதி), அக்டோபர் 3ம் தேதி அடிலய்டு, அக்டோபர் 5ம் தேதி பிரிஸ்பென்னிலும் நடக்கிறது. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் கச்சேரி நடத்துகிறார் இளையராஜா.

இந்நிலையில் அவரின் 50 ஆண்டு இசைப்பயணத்தை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் அவருக்கு சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அமைச்சர் என்வர் எர்டாகன் வெளியிட இளையராஜா பெற்றுக்கொண்டார். இந்த கவுரவம் ஆஸ்திரேலிய பார்லிமென்டில் நடந்துள்ளது.

இளையராஜா நன்றி
எனது 50 ஆண்டுகால இசை பயணத்தைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக விக்டோரியன் அரசாங்கத்தின் நிதித்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்வர் எர்டாகனுக்கும், சக பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கவுரவிக்கப்படுவது உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டும் ஒரு நிகழ்வாகும். அத்துடன், எனது இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்றவர்களுக்கும், என்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்களுக்கும், எனது இசைப் படைப்புகளை அன்புடன் ஏற்றுக் கொண்ட பல தலைமுறை ரசிகர்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Kavi Priyan Adelaide
2026-09-22 18:47:14

இசைஞானி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..