மீண்டும் வில்லனாக நடிக்கும் ஜீவன்
ADDED : 5 hours ago
'காக்க காக்க' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஜீவன், அதன் பிறகு 'நான் அவனில்லை, யுனிவர்சிட்டி, திருட்டுபயலே மச்சக்காரன், அதிபர்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக 'பாம்பாட்டம்' என்ற படத்தில் நடித்தார்.
தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அசோக் குமார் இயக்கும் 'லவ்வர் பாய்' படத்தில் இணைந்துள்ளார். இதில் அர்ஜித் சங்கர் மற்றும் கீர்த்தி ஷெட்டி நாயகன், நாயகியாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜீவன் மீண்டும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.