உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. அதில் இயக்குனர் சேரன் தலைமையிலான குழுவினர் பெரும்பான்மை வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களது சங்கத்தில் இணையாதவர்களை உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் சிவகார்த்திகேயன் அந்த சங்கத்தில் இணைந்துள்ளார். இது குறித்து சங்கத் தலைவர் சேரன் எக்ஸ் தளத்தில், “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகர்த்திகேயன்.

இன்று மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்வது தொடர்பாகவும் சிவகார்த்திகேயனை எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக நானும், என்னுடன் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குனர் செல்வபாரதி, இயக்குனர் KBB நவீன் ஆகியோர் சந்தித்தோம்..

எங்களின் வேண்டுகோளை ஏற்று பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காக சில ஆலோசனைகளும் வழங்கினார். விழாவிற்கு வருவதாகவும் கூறி நிறைவான மனதுடன் எங்களை வழி அனுப்பி வைத்ததை மகிழ்வாக பகிர்கிறோம். தொடரட்டும் வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்….,” எனப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !