'டேர்டெவில்' ஹீரோயின் யார்? அஜித் கையில் முடிவு
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'டேர்டெவில்' படம் நவம்பர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த படத்தை அஜித்தை தனது மனைவி ஷாலினி பெயரில் தயாரிக்கிறார். அந்த பட நிறுவனத்தின் பெயர் பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ். அஜித் தவிர மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் சுதீப், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் கவுரவ வேடத்தில் வருகிறார்கள் என சொல்லப்பட்டாலும் இன்னமும் எதுவும் முடிவாகவில்லையாம். ஹீரோயினாக நடிக்க திரிஷா, நயன்தாரா உட்பட பலர் மோதுகிறார்கள்.
இன்னும் சில முன்னணி ஹீரோயின்களும் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். இது அஜித்தின் சொந்த படம் என்பதால், அதிக செலவு வந்துவிடக்கூடாது என்று படக்குழு நினைக்கிறதாம். அதனால், அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் படத்தில் இருக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின் படத்தில் இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாம். ஷாலினி படத்தின் தயாரிப்பாளர் என்றாலும் அவர் பல ஆண்டுகளுக்குபின் கவுரவ வேடத்தில் நடிக்க வாய்ப்பு அதிகமாம். சொந்த படம் என்பதால் அதிக செலவு, தேவையற்ற விஷயங்கள் கூடாது. படத்தை நல்லபடியாக ரிலீஸ் செய்யணும் ஒரு ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது என்று அஜித் உத்தரவிட்டு இருக்கிறாராம்.