உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அழகாக இருந்ததால் வாய்ப்பு தர மறுத்தார்கள்: ஷாஷா சிவகுமார்

அழகாக இருந்ததால் வாய்ப்பு தர மறுத்தார்கள்: ஷாஷா சிவகுமார்


'ரத்னம், லவ் ஓ லவ்' உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் ஷாஷா சிவகுமார். தற்போது 'என்ன விலை' என்ற படத்தில் கருணாசின் தங்கையாக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தில் நடித்திருப்பது பற்றி ஷாஷா கூறும்போது “இதுவரை பல படங்களில் சின்ன சின்ன கேக்டரில் நடித்திருக்கிறேன். பல ஆடிசன்களில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். உயரமாக இருக்கிறீர்கள், சிவப்பாக இருக்கிறீர்கள் அதனால் இந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டீர்கள் என்று திரும்பி அனுப்பி இருக்கிறார்கள். என்ன விலை படத்தில் நான் மீனவ கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். டல் மேக்அப் போட்டு வெயிலில் நின்று நிறத்தை குறைத்து நடித்திருக்கிறேன்.

முதன்முறையாகக் கிராமப்புறப் பெண்ணாக நடித்திருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்வதற்கு முன்பே இந்தக் கதாபாத்திரத்துக்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். அது நடிப்பதற்கு எளிதாக இருந்தது. இது எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவம்.

இதில் நடித்த கருணாஸ் அற்புதமான நடிகர். நிமிஷா திறமையானவர். அவர்களுடன் இணைந்து நடிக்கும்போது இயல்பாகவே நமக்கும் பொறுப்புணர்வு வந்துவிடும். மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றியது கற்றல் அனுபவமாக இருந்தது”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !