உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்திற்கு மீண்டும் தலைவர் ஆனார் மங்கை அரிராஜன்

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்திற்கு மீண்டும் தலைவர் ஆனார் மங்கை அரிராஜன்


தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல் வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் வளாகத்தில் நடைபெற்றது. இதில் நான்கு அணிகள் போட்டியிட்டன. தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். 1201 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக தற்போதைய தலைவர் மங்கை அரிராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

பொதுச் செயலாளராக ஆர். அரவிந்தராஜ், பொருளாளராக அறந்தாங்கி சங்கர், துணைத்தலைவர்களாக எஸ்.வி.சோலைராஜா, குட்டி பத்மினி, இணைச் செயலாளர்களாக ஆதித்யா, விக்ராந்த் வெற்றி பெற்றுள்ளனர். 1201 உறுப்பினர்களில் 654 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தேர்தல் அதிகாரியாக மு.பாலசுப்ரமணியம் பணியாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !