உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சதுரங்க விளையாட்டு பின்னணியில் உருவாகும் 'தி கிராண்ட் மாஸ்டர்'

சதுரங்க விளையாட்டு பின்னணியில் உருவாகும் 'தி கிராண்ட் மாஸ்டர்'


இயக்குநர்கள் எச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், இயக்குநரான அறிமுகமாகும் படம் 'தி கிராண்ட் மாஸ்டர்'.

இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜூன் ரவி மற்றும் ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது “தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் ஒரு தாய், வறுமை மற்றும் சமூகச் சவால்களைக் கடந்து தனது மகனைச் செஸ் விளையாட்டில் சாதிக்க வைத்து 'கிராண்ட் மாஸ்டர்' ஆக்கப் போராடும் உணர்வுபூர்வமான கதைக் களத்தை இத்திரைப்படம் பேசுகிறது.

திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !