'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
மலையாளத்தில் சமீபத்தில் 'திரிஷ்யம் 3' திரைப்படம் வெளியானது இதன் மூன்று பாகங்களிலும் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற மலையாள நடிகர் சங்க தேர்தலில் போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்தை சேர்ந்த சிலர் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக கூறி தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அது மட்டுமல்ல நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான லட்சுமி பிரியா தன் மீது போலி புகார் அளித்து அதன் காரணமாக திருப்பணித்துரா காவல் நிலையத்தில் வேண்டும் என்றே தான் கடுமையாக நடத்தப்பட்டதாக கூறியதுடன் அது குறித்து சமீபத்தில் கேரளாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற வி.டி. சதீசனிடம் நேரில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது குறித்த விசாரணை துவங்கி உள்ளது. இந்த விசாரணையில் நடிகை அன்சிபா ஹாசன் நேற்று (ஞாயிறு) ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க துணை தலைவரான நடிகை லட்சுமி பிரியாவையும் நேரில் ஆஜராகுமாறு டிஜிபி அலுவலகம் லட்சுமி பிரியாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அன்சிபா ஹாசன் தனக்கு அனுப்பிய வாட்ஸ் அப் சாட்டிங் மூலமாக தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தததாக லட்சுமி பிரியா கூறியிருந்தார் என்பதும் அதற்காக தான் விசாரணை என்கிற பெயரில் தான் கடுமையாக நடத்தப்பட்டதாக அன்சிபா கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.