பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் மே 28ம் தேதி வெளியான படம் 'பிளாஸ்ட்'. இப்படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது படத்தை நன்றாகவே பிக்அப் செய்ய வைத்தது.
முதல் நாளில் மிகவும் டல்லாக இருந்த வசூல், நேற்றைய நான்காவது நாளில் முதல் நாளை விட சிறப்பாக அமைந்தது. நான்கு நாட்களில் இப்படம் 25 கோடிய 26 லட்ச ரூபாயை உலக அளவில் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நிலா மற்றும் அவளது குடும்பத்தினர் மீது நீங்கள் பொழிந்த அனைத்து அன்புக்கும் மிக்க நன்றி, வசூல் வேட்டை... அதிரடி வெற்றி!
இத்திரைப்படம் பொதுமக்களைச் சென்றடைய உதவிய பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்குப் பெரும் நன்றி. மேலும், இப்படத்தைப் பெரிய திரையில் சென்று கண்டுகளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்கள் வாய்மொழிப் பரிந்துரைகள், வசூல் ரீதியாக ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியுள்ளன. எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. மிகவும் வலுவான முதல் வாரம் அமையவிருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.