உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம்

கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம்


மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' படத்தில் ஐஜி கீதா பிரபாகர் என்கிற மிரட்டலான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவர் நடிகை ஆஷா சரத். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் 'பாபநாசம், தூங்காவனம், அன்பறிவு' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே துபாயில் செட்டில் ஆகிவிட்ட ஆஷா சரத் சினிமாவில் நடிப்பதற்கு மட்டுமே கேரளா வந்து செல்கிறார்.

இவருக்கு உத்தரா, கீர்த்தனா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 2023ல் உத்தராவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இளைய மகள் கீர்த்தனாவுக்கும் அகில் என்பவருக்கும் கொச்சியில் உள்ள தனியார் அரங்கில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் சுரேஷ்கோபி, ஜெயராம், திலீப் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். மணமகள் கீர்த்தனா கனடாவில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் சிந்தடிக் பயாலஜி துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !