வாசகர்கள் கருத்துகள் (1)
ரொம்ப பீத்திக்காதீங்க. எங்க தொளபதி அரசியல் பக்கம் போனதால தப்பிச்சீங்க. அவர் சினிமாலயே இருந்திருந்தா, சோசியல் மீடியால படத்தை நாறடிச்சி ஐம்பது கோடிக்குள்ள முடிச்சிருப்போம்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் அறிவிக்கப்பட்ட மே 14ம் தேதிக்குப் பதிலாக ஒரு நாள் தாமதமாக மே 15ம் தேதி வெளியான படம் 'கருப்பு'. படத்தின் வெளியீட்டிற்காக ஏற்பட்ட 'டெபிசிட்', அதாவது பற்றாக்குறை 60 கோடிக்கும் அதிகமாக சுமார் 100 கோடி வரை இருந்ததாகச் சொன்னார்கள். அதாவது படத் தயாரிப்பு நிறுவனம் முந்தைய தயாரிப்புகள், வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் மற்றவர்களுக்குத் திருப்பித் தர வேண்டிய தொகைதான் அது.
ஆனால், தற்போது படம் வெளியாகி டபுள் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. வெளியீட்டிற்கு முன்பாக சொல்லப்பட்ட 'டெபிசிட்' தொகை, இப்போது 'பிராபிட்' தொகையாக மாறியிருக்கிறது. தற்போது வரையிலும் சுமார் 70 கோடி லாபம் கிடைத்திருக்கலாம் எனத் தகவல். இந்த வாரமும் படம் தியேட்டர்களில் தாக்குப் பிடிக்கும் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனேவ 300 கோடி வசூலை உலக அளவில் கடந்துள்ள படம் இன்னும் 25 கோடிக்கும் கூடுதலாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2026ம் ஆண்டின் அதிக வசூல், அதிக லாபம் தந்த படங்களில் முதலிடத்தைத் தற்போது பிடித்துள்ளது.
தற்போதைய லாபத்தால் வெளியீட்டிற்கு முன்பாகத் தர வேண்டிய கடன்களை தயாரிப்பு நிறுவனம் எளிதில் திருப்பிக் கொடுத்துவிடும் நிலை வந்துள்ளது. அதற்கான உத்தரவாதத்தை சூர்யா தான் தந்தார் என்றும் தகவல்.
படத்தின் வெற்றியால் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் ஆகியோருக்கு கார்களை பரிசளித்துள்ளார் படத்தின் நாயகன் சூர்யா. அடுத்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு இன்னும் விலை உயர்ந்த கார் ஒன்றைப் பரிசளிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ரொம்ப பீத்திக்காதீங்க. எங்க தொளபதி அரசியல் பக்கம் போனதால தப்பிச்சீங்க. அவர் சினிமாலயே இருந்திருந்தா, சோசியல் மீடியால படத்தை நாறடிச்சி ஐம்பது கோடிக்குள்ள முடிச்சிருப்போம்.