தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ குழந்தைகளை கவரும் பாலக்கீரை அப்பம்

 குழந்தைகளை கவரும் பாலக்கீரை அப்பம்

 குழந்தைகளை கவரும் பாலக்கீரை அப்பம்


ADDED : ஏப் 04, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பாரம்பரிய உணவான அப்பம், தென் மாநிலங்களில் மிகவும் பிரபலமானது. இது, அனைவருக்கும் பிடித்த உணவாகவும் உள்ளது. வீடுகளில் முட்டை அப்பம், இனிப்பு அப்பம், வெள்ளை அப்பம் அடிக்கடி தயாரிக்கப்படும். சற்று வித்தியாசமாக பாலக்கீரையில் அப்பம் செய்து பார்க்கலாமே...

தேவையான பொருட்கள்

 ஒரு கட்டு பாலக்கீரை

 ஒரு கப் ரவை

 ஒரு கப் கோதுமை மாவு

 அரை கப் அவல்

 அரை கப் தயிர்

 உப்பு தேவையான அளவு

 ஒரு பச்சை மிளகாய்

 கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை தேவையான அளவு

 அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா

 நெய் தேவையான அளவு

செய்முறை

அடுப்பை ஆன் செய்து, பெரிய பவுலில் கீரையை போட்டு நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு, அவல், தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் வேகவைத்த கீரை, ஊற வைத்த பொருட்கள், உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

இதனை பாத்திரத்துக்கு மாற்றி அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, சிறிது நேரம் மூடி போட்டு வைத்து விடவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் மாவை ஊற்றி சுற்றி விட்டு, நெய் விட்டு மூடி வைத்து வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும் எடுத்தால் போதும். அவ்வளவு தான் சுவையான பாலக்கீரை ரவை அப்பம் தயார்.

நாட்டு சர்க்கரை, சட்னி தொட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளையும் இந்த அப்பம் வெகுவாக கவரும். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் அவர்களுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us