தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ மாலை நேர ஸ்நாக்ஸ் ரவா வாழைப்பழ லட்டு

 மாலை நேர ஸ்நாக்ஸ் ரவா வாழைப்பழ லட்டு

 மாலை நேர ஸ்நாக்ஸ் ரவா வாழைப்பழ லட்டு


ADDED : ஏப் 04, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: பள்ளி, கல்லுாரி சென்று, மாலை வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே சத்தான, ஊட்டச்சத்து நிறைந்த ரவா வாழைப்பழ லட்டு செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

 ரவை - ஒரு கப்

 பழுத்த வாழைப்பழம் - 1

 ஏலக்காய் துாள் - சிறிதளவு

 நெய் - 2 தேக்கரண்டி

 பால் - ஒன்றரை கப்

 நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் - ஒரு கப்

செய்முறை

 முதலில் ஒரு பெரிய பழுத்த வாழைப்பழத்தின் தோலை உரித்து, சிறிது சிறிதாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

 இதை ஒரு பவுலில் போட்டு நன்கு மசித்து கொள்ளவும்.

 ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி, மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து, சில நிமிடம் நன்றாக வதக்குங்கள். பின்னர், சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்க்கவும்.

 அதனுடன் ஒரு கப் ரவை சேர்த்து கலக்கவும். ஐந்து நிமிடங்களுக்கு பின், ஒன்றரை கப் பால் சேர்த்து, கெட்டியாகி வரும் வரை நன்றாக கலக்கவும்.

 இந்த கலவையுடன் ஒரு கப் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

 உருண்டையாக பிடிக்கும் பதத்துக்கு வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். சூடு ஆறியதும் சிறு சிறு லட்டு உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.

 வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து, உருட்டி வைத்துள்ள சிறிய லட்டு உருண்டைகளை போட்டு, கொஞ்ச நேரத்திற்கு பிரை செய்து எடுத்தால், ரவா வாழைப்பழ லட்டு தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us