தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ சமையல் மணக்க டிப்ஸ்

 சமையல் மணக்க டிப்ஸ்

 சமையல் மணக்க டிப்ஸ்


ADDED : ஏப் 04, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 மிக்ஸியில் ஒரு தக்காளி, கொஞ்சம் புதினா இலை சேர்த்து விழுதாக அரைத்து, பஜ்ஜி மாவுடன் சேர்த்து பஜ்ஜி சுட்டால் சுவையாக இருக்கும்.

 மோர் குழம்பு வைக்கும் போது, சிறிய நெல்லிக்காயை அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.

 பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது, பருப்புடன் ஒரு கைப்பிடி கொள்ளையும் சேர்த்து அரைத்தால், சுவையாக இருப்பதுடன், வாயு தொல்லையும் ஏற்படாது.

 கேரட்டை வேக வைக்கும் தண்ணீரில், கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் கேரட்டிற்கு தனி மனம் கிடைக்கும்.

 எந்த ஊறுகாயாக இருந்தாலும், கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் எளிதில் கெட்டு போகாது.

 பிரியாணி தயார் செய்யும் போது, எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால், பிரியாணி அரிசி தனித்தனியாக பிரிந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

 ஆம்லெட் செய்யும் போது, சீஸ் உதிர்த்து சேர்த்து கொண்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

 தக்காளி தொக்கு செய்யும் போது சிறிதளவு சிக்கன், 65 மசாலா சேர்த்தால் சுவை துாக்கலாக இருக்கும்.

 கொத்தமல்லி துவையல் அரைக்கும் போது, தயிர் சேர்த்து அரைத்தால் சுவை அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us