உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாகுபலி 2' வசூலை முறியடித்த 'ராமாயணா'

'பாகுபலி 2' வசூலை முறியடித்த 'ராமாயணா'

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் நவம்பர் 5ல் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தித் திரைப்படம் 'ராமாயணா'. தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வசூலைக் குவித்து வருகிறது.

தற்போதைய வசூல் நிலவரப்படி 'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூலை 'ராமாயணா' முறியடித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பாகுபலி 2' படம் 1780 கோடி வசூலைப் பெற்றிருந்தது. தற்போது 'ராமாயணா' படம் 1790 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இதன் மூலம் உலக அளவில் அதிக வசூலைக் குவித்துள்ள இந்தியப் படங்களில் 'ராமாயணா' படம் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 'டங்கல்' திரைப்படம் 2000 கோடி வசூலுடன் முதலிடத்திலும், 'துரந்தர் 2' படம் 1810 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதையும் முறியடித்து 'ராமாயணா' படம் 2வது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !