உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ்

சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் 'லவ் பைட்' . செல்வின் ராஜ் சேவியர் இயக்க, அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, 'தாய் கிழவி' புகழ் முத்துக்குமார், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜாம்பிஸ் பட பின்னணியில் காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்தப்படம் டிசம்பரில் ரிலீஸ் என தேதி குறிப்பிடாமல் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் 'லவ் பைட்' திரைப்படம் வரும் டிசம்பர் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !