உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 2 மாதம் பயிற்சி எடுக்கும் அமீர்கான்

கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 2 மாதம் பயிற்சி எடுக்கும் அமீர்கான்

பாலிவுட்டில் இதற்கு முன்னதாக கபில்தேவ், தோனி உள்ளிட்டோரின் பயோபிக் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவர்களெல்லாம் இப்போதைய காலகட்ட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதேசமயம் 1930-களில் இந்திய அணிக்காக விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத் பற்றி இப்போதைய ரசிகர்களுக்கே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிற்காக முதன்முறையாக சதம் அடித்த வீரர் இவர் தான்.. அந்த வகையில் தற்போது அவரது வாழ்க்கை வரலாறு தற்போது லால்காரா என்கிற பெயரில் படமாகி வருகிறது.

லாலா அமர்நாத் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார்.. அசுதோஷ் கோவரிகர் இயக்குகிறார். இந்த கதாபாத்திரத்திற்காக தற்போது தீவிரமான கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அமீர்கான். 83 திரைப்படத்திற்காக பணியாற்றிய பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டு பேரின் மேற்பார்வையில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. தற்போது மும்பை பாந்த்ராவில் உள்ள அமீர்கானின் வீடு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தெற்கு மும்பையில் உள்ள பிரபல கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் பயிற்சிக்காக மும்பை கொலாபாவில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்புக்கு மாறியுள்ளார் அமீர்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !