நவம்பர் மாத இறுதி : ஓடிடியில் வெளியாகும் புதிய படங்கள்....!
ஓடிடியில் இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படங்களின் பட்டியல் குறிந்து தெரிந்துக் கொள்ளலாம்.
ஆக்டோபஸ்
இயக்குநர் ஜெய சந்திரன் ஹாஷ்மி இயக்கத்தில் அஸ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ஆக்டோபஸ்'. ஏழு பாகங்களாக உருவாகியுள்ள இந்த தொடர் நாளை ஜீ5யில் வெளியாகவுள்ளது.
ஏகே47
தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், வெங்கடேஷ் டகுபதி, ஸ்ரீநிதி ஷெட்டி, நாரா ரோஹித், நிவேதிதா பெத்துராஜ், யுவினா பார்த்தவி, ராஜா ப்ரஜ்வால், ராவ் ரமேஷ், சத்யாம் பிரம்மாஜி ஆகியோர் நடித்துள்ள குடும்ப கதையம்சம் கொண்ட படம் ‛ஏகே47'. அக்டோபர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
கர்விடி லக்ஷ்மி
தெலுங்கு இயக்குநர் கவுரி நாயுடு ஜம்மு இயக்கத்தில் கயல் ஆனந்தி, ராக் மயூர், நரேஷ் ராசி, எல்பி ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கர்விடி லக்ஷ்மி'. இந்த படத்தில் 'கயல் ஆனந்தி' நாட்டுப்புற பாடகராக நடித்துள்ளார். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியானது.
கார்ப்பரேட் லவ் ஸ்டோரி
கன்னட இயக்குநர் பன்னகா பரணா இயக்கத்தில் பிரியங்கா உபேந்திரா, சஞ்சனா தாஸ், ப்ரணவ் ஸ்ரீதர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'கார்ப்பரேட் லவ் ஸ்டோரி'. தொழில் லட்சியங்கள் மற்றும் தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடையிலான உறவுச் சிக்கலை இத்தொடர் பேசும் வகையில் உருவாகியுள்ள இந்த தொடர் நாளை ஜீ5யில் வெளியாகவுள்ளது.
ஹனுமான் அன்ஷ்
இயக்குநர் விஷால் சதுர்வேதி இயக்கத்தில் ஷோபினாவ் சத்யா, சந்தன் ஆனந்த், பூர்ணிமா திவாரி, விஹான் ஷெட்ஜ், அனில் ரஸ்தோகி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'ஹனுமான் அன்ஷ்'. இந்த திரைப்படம் நாளை சோனி லைவ்விலும், நவ.29ம் தேதி நெட்பிளிக்ஸிலும் வெளியாகவுள்ளது.