உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிவி விவாத நிகழ்ச்சி சர்ச்சை : சேரன், திவாகர் மோதல்

டிவி விவாத நிகழ்ச்சி சர்ச்சை : சேரன், திவாகர் மோதல்

ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் திவாகர். தன்னைத் தானே 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்று அழைத்துக் கொள்கிறவர். பெருகி விட்ட யு டியூப் வீடியோக்கள் மூலம் குறுகிய காலத்தில் தனித்தொரு அடையாளம் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவிற்கு இவரது பாபுலிரிட்டி உயர்ந்தது.

இந்நிலையில், ஜெயா தொலைக்காட்சியில் இயக்குனர் சேரன் தொகுத்து வழங்கும் 'யார் சரி' நிகழ்ச்சியில் திவாகர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சேரனுக்கும், திவாகருக்கும் வார்த்தை போர் நடந்தது. திவாகர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் திவாகர், சேரன் தன்னை அவமதித்துவிட்டதாகவும், தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் இப்படி செய்வதாகவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டதோடு, சேரனுக்கு எதிராக தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்பட இருப்பதாக பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து சேரன், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “இதுவே உண்மையில் நடந்தது. அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டு வர காரணமாகிவிட்டார். முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம். ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது. சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள்.

ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா. இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன். ஒரு உயிர்போய்விட்டால் அவனை நம்பி உயிர்கள் இருக்குமே என கவலைப்படுபவன் நான். ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை” என சேரன் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !