பெத்தி பாடல் சர்ச்சை குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்
ராம் சரண் நடிப்பில் வெளியான பெத்தி படத்தின், ‛ஹெல்லல்லல்லோ' பாடலின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதாவது, ‛‛எனக்கு நடனமாடுவதும், அலங்காரம் செய்து கொண்டு திரையில் கவர்ச்சியாக தோன்றுவதும் மிகவும் பிடிக்கும் என்றும், யாரும் தன்னை கட்டாயப்படுத்தி இந்தப் பாடலில் ஆட வைக்கவில்லை. உடைகள் மற்றும் நடன அசைவுகளில் எது சவுகரியமாக இருக்கிறதோ அதை மட்டுமே செய்கிறேன். யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஏதேனும் சரியாக தோன்றாத பட்சத்தில் அது குறித்து வெளிப்படையாகப் பேசுவதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஜான்வி கபூர் குறித்து அதிகம் கருத்துத் தெரிவிக்காமல், அனைவரின் முயற்சிகளையும் மீறிச் சில நேரங்களில் சில விஷயங்கள் தவறவிடப்படலாம் என்பதையும் ஸ்ருதிஹாசன் ஒப்புக் கொண்டார்.
பெத்தி பாடலைச் சுற்றி நடந்து வரும் விவாதங்களின் பின்னணியில், ஸ்ருதியின் இந்த கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன. படப்பிடிப்புகளின்போது சரியான தகவல் தொடர்பும், நடிகர்களின் சௌகரியத்தை உறுதி செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை ஸ்ருதியின் இந்த விளக்கம் எடுத்துக்காட்டுகிறது.