உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்வியாளர் கந்தசாமி நாயுடு வாழ்க்கை சினிமா ஆகிறது

கல்வியாளர் கந்தசாமி நாயுடு வாழ்க்கை சினிமா ஆகிறது

தமிழ் நாட்டில் சிறந்த கல்வியாளராக அறிப்பட்டவர் சி.கந்தசாமி நாயுடு. செங்கல்பட்டு மாவட்டம் கல்வோய் கிராமத்தை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்து செங்கல் சூளையில் சாதாரணத் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தனது கடின உழைப்பு மற்றும் நேர்மையால் கொத்தனாராக உயர்ந்து, சொந்தமாகச் செங்கல் சூளை மற்றும் கட்டுமானத் தொழில்களைத் தொடங்கிப் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் கண்டார்.

தன்னால் படிக்க முடியாமல் போன நிலை வருங்கால மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, பச்சையப்பா அறக்கட்டளையுடன் இணைந்து தனது சொத்தில் பெரும் பகுதியை எழுதி வைத்தார். இவரது நன்கொடையின் மூலம் 1967ம் ஆண்டு சென்னையில் சி. கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி மற்றும் கடலூரில் சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டது.

தற்போது இவர் வாழ்க்கை திரைப்படமாக தயாராகிறது. அரோவனா பிக்சர்ஸ் சார்பில் தீபா சிவாஜி தயாரிக்கிறார். நாகா. கேஎம்ஐ இயக்குகிறார். தயாரிப்பாளர் தீபா சிவாஜியின் மகன் சத்யா சிவாஜி, கந்தசாமி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாபு கே.செல்வராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !