உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சரத்குமார் நடிக்கும் 177வது படம் ‛டாக்ஸி'

சரத்குமார் நடிக்கும் 177வது படம் ‛டாக்ஸி'

நடிகர் சரத்குமார் நடிப்பில், தனா இயக்கத்தில், பெர் ஜெயா குழுமம்- ரேடான் மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் ஆக் ஷன் எண்டர்டெயினர் திரைப்படம் 'டாக்ஸி'. படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

இயக்குனர் மணி ரத்னமும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். காரணம் இந்த படத்தின் இயக்குனர் தனா, மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். பொதுவாக குறைவாக பேசும் இயல்புடைய மணி ரத்னம், இந்த நிகழ்ச்சியில் தனாவின் முயற்சியை வெகுவாகப் பாராட்டியதுடன், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இயக்குனர் தனா வானம் கொட்டட்டும் பட இயக்குனரும் கூட. இது சரத்குமார் நடிக்கும் 177 படம். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதுகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை சில்வா மாஸ்டர் வடிவமைக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !