உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 1600 கோடி வசூல் கடந்த 'ராமாயணா' : இந்தியாவில் மட்டும் 1100 கோடி

1600 கோடி வசூல் கடந்த 'ராமாயணா' : இந்தியாவில் மட்டும் 1100 கோடி

ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'ராமாயணா' படம் உலக அளவில் 1600 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியான 17 நாட்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் 1100 கோடியும், வெளிநாடுகளில் 550 கோடியும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

தென்னிந்தியாவில் ஒவ்வொரு மொழியிலும் 50 கோடி வசூலைக் கடந்துவிட்டது. கர்நாடகாவில் மட்டும் இப்படம் 150 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். கன்னடம் அல்லாத ஒரு படம் இவ்வளவு வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பு 'துரந்தர் 2, பாகுபலி 2' ஆகிய படங்கள் கர்நாடகாவில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.

கன்னட நடிகரான யஷ் 'ராமாயணா' படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவரது மாநிலத்தில் இப்படம் வசூலைக் குவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !