மம்முட்டி இருந்தும் கேரளாவில் ஓம் படத்தை முந்திய ராமாயணா
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஓம். இதில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் மிகச்சிறந்த தொடக்கத்தைப் பெற்ற இப்படம், முதல் நாளில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இருப்பினும், சனிக்கிழமை முன்பதிவு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. பாலிவுட்டின் பிரம்மாண்டத் திரைப்படமான ராமாயணா, ஓம் படத்தை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான முன்னிலையில் உள்ளது. ஒரு மலையாள உச்ச நடிகர் நடித்துள்ள படத்தை, வெளியாகி மூன்றாவது வார இறுதியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஹிந்திப்படம் பின்னுக்குத் தள்ளியிருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள ராமாயணா படம், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் ரூ.75 கோடி வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வெளியாகவுள்ள மலையாளப்படங்களின் வரவேற்பு மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே இப்படத்தின் இறுதி வசூல் அமையும்.