அடுத்த படத்திற்காக உடலமைப்பை மாற்றும் ராம் சரண்
பெத்தி படத்தை அடுத்து, சுகுமார் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தற்காலிகமாக ஆர்.சி 17 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அடுத்த படத்திற்காக தன்னை தயார்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளார் ராம் சரண். சமீபத்தில் ஒரு ரகசிய இடத்திற்கு மூன்று நாள் ஓய்விற்காக சென்றிருந்த நடிகர் ராம் சரண், தற்போது வீடு திரும்பி இப்படத்திற்காக தனது உடலமைப்பை மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது அவர் தனது உடற்தகுதி பணிகளைத் தொடங்கியுள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப கடுமையான உடல் மாற்றங்களைச் செய்வதற்குப் பெயர் பெற்ற ராம் சரண், தனது தனிப்பட்ட பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்கனவே தீவிரப் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டார். சுகுமாரின் படத்தில் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடலமைப்பைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இவர்களது முந்தைய கூட்டணியில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் மற்றும் சுகுமார் மீண்டும் இணைவது படம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலமைப்பைத் தயார்படுத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், ஆர்சி-17 படம் குறித்த எதிர்பார்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இப்படத்தின் கதாநாயகி குறித்த விவரங்களை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.