இளையராஜா, கமல்ஹாசன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
இந்தியத் திரையுலக மேதை தாதா சாகேப் பால்கே பெயரில் தனியார் அமைப்பு ஒன்று 2016ம் ஆண்டு முதல் இந்திய அளவில் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறது.
2026ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகளை தற்போது அறிவித்துள்ளது. இந்தியத் திரையுலகத்தில் தனிப் பெரும் சாதனைகளைப் புரிந்த இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதுகளை அறிவித்துள்ளார்கள்.
விருது பெற்றவர்களின் விவரம்…
சிறந்த படம் - துரந்தர்
சிறந்த நடிகர் - ரன்வீர் சிங் (துரந்தர்)
சிறந்த நடிகை - அனீத் பட்டா (சாயரா)
சிறந்த படம் விமர்சகர் விருது - காந்தாரா சாப்டர் 1
சிறந்த நடிகர் விமர்சகர் விருது - ரிஷப் ஷெட்டி (காந்தாரா சாப்டர் 1)
சிறந்த நடிகை விமர்சகர் விருது - யாமி கவுதம் (ஹக்)
சிறந்த இயக்குனர் - ஆதித்ய தர் (துரந்தர்)
சிறந்த தயாரிப்பாளர் - ஆதித்ய தர், ஜோதி தேஷ்பான்டே, லோகேஷ் தர் (துரந்தர்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - அரவிந்த் எஸ் காய்ஷயப் (காந்தாரா சாப்டர் 1)
சிறந்த நடன இயக்குனர் - சாண்டி (கூலி - மோனிகா…பாடல்)
சிறந்த திரைக்கதை, வசனம் - ரேஷு நாத் (ஹக்)
சிறந்த துணை நடிகர் - வினித் குமார் சிங் (ச்சாவா)
சிறந்த எதிர்மறை நடிகர் - அக்ஷய் கண்ணா (துரந்தர்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - ரிதேஷ் தேஷ்முக் (ஹவுஸ்புல் 5)
சிறந்த பாடலாசிரியர் - இர்ஷத் கமில் (சாயரா - டைட்டில் பாடல்)
ஆண்டிற்கான சிறந்த கலைஞர் - கரண் அஜுலா
ஆண்டின் சிறந்த பாடல் - சாயரா….. (சாயரா)
ஆண்டின் நகைச்சுவை நடிகர் - சமய் ரைனா
சிறந்த இசையமைப்பாளர் - சஷ்வந்த் சச்தேவ் (துரந்தர்)
சிறந்த பின்னணிப் பாடகர் - பஹீம் அப்துல்லா (சாயரா - டைட்டில் பாடல்)
இசைத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது - இளையராஜா
திரைத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது - கமல்ஹாசன்