திகில் கதையில் பிரியங்கா மோகன்
ADDED : 17 minutes ago
நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கில் நடிக்கிறார். குறிப்பாக தமிழில் சிம்பு உடன் அவர் நடிக்கும் அரசன் படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது அவர் கைவசம் இருமொழிகளிலும் சேர்த்து 5 படங்கள் உள்ளனவாம். இவற்றில் ஒரு படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜெய் ஹீரோவாக நடிக்க முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதனால் ஏஜிஎஸ் 29 என்று தற்காலிகமாக குறிப்பிட்டு வருகின்றனர். பிரியங்காவின் பிறந்நாளை முன்னிட்டு அவரது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில் அவரது கண்கள் வித்தியாசமாக உள்ளன. இதை வைத்து பார்க்கையில் இது சஸ்பென்ஸ் நிறைந்த திகில் கதையாக இருக்கும் என தெரிகிறது. முதன்முறையாக இந்தமாதிரி ஒரு வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.